தமிழ்நாடு

நந்தனம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கட்சி தலைவர்கள் மரியாதை

Published On 2023-10-30 06:56 GMT   |   Update On 2023-10-30 06:56 GMT
  • தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சாமிநாதன், மனோஜ் தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
  • முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் அணி அணியாக வந்து மாலை அணிவித்தனர்.

சென்னை:

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சென்னை நந்தனம் அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் பகுதியில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அரசின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

முத்துராமலிங்க தேவர் படத்திற்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சாமிநாதன், மனோஜ் தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, தாயகம் கவி, வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். கவிஞர் வைரமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், டி.ஜெயக்குமார், பச்சைமால், ஓ.எஸ்.மணியன், மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வக்கீல் முருகவேல் பாபு, வேல் ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஜி.ஆர்.வெங்கடேசன், சைதை மனோகரன், ஆர்.எஸ்.முத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செந்தமிழன், சுகுமார் பாபு உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தியையொட்டி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் அம்பத்தூர் பாலமுருகன், அப்புனு, தாமு ஆகியோர் மாலை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அஸ்லாம், கவியரசன், நரேஷ்குமார், கருணாகரன், கார்த்திகேசன், சுரேஷ், வினோ விஜய், கோபிநாத், பிரவீன், ஆனந்த் உள்பட சென்னை மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் அணி அணியாக வந்து மாலை அணிவித்தனர்.

Tags:    

Similar News