தமிழ்நாடு (Tamil Nadu)

ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு ரூ.1000 தொடர்ந்து பெறலாம்- வெளியூர் சென்றவர்கள் பெற வசதி

Published On 2023-01-18 04:21 GMT   |   Update On 2023-01-18 06:26 GMT
  • பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன.
  • பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

சென்னை:

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரூ.1000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி முதல் வரை வழங்கப்பட்டன. 92 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டது.

பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன. இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து வினியோகித்து கொண்டு இருக்கிறோம் என்றார்.

Tags:    

Similar News