தமிழ்நாடு

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.115 குறைப்பு- வீட்டு சமையல் கியாஸ் விலையில் மாற்றம் இல்லை

Published On 2022-11-01 04:25 GMT   |   Update On 2022-11-01 11:24 GMT
  • வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,200-க்குள் இருந்தால்தான் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும்.
  • அதிகளவில் ஏற்றி விட்டு சிறிதளவு குறைப்பதால் எந்த பயனும் இல்லை என்று ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

சென்னை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கின்றன.

அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான கியாஸ் விலை குறித்த அறிவிப்பு இன்று காலையில் வெளியானது. வர்த்தக சிலிண்டர் விலை ரூ.115.50 குறைக்கப்பட்டது. 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,859.50-ல் இருந்து ரூ.1,744 ஆக குறைந்துள்ளது.

கடந்த மாதமும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டது. ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை குறந்த போதிலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

சென்னையில் சமையல் சிலிண்டர் விலை ரூ.1,068.50-ஆக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து விலை குறைந்து வருவதால் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,200-க்குள் இருந்தால்தான் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும். அதிகளவில் ஏற்றி விட்டு சிறிதளவு குறைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News