தமிழ்நாடு

4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் விவகாரம்- பா.ஜ.க. நிர்வாகியிடம் விரைவில் விசாரணை

Published On 2024-05-05 07:05 GMT   |   Update On 2024-05-05 07:05 GMT
  • கோவர்த்தன் தற்போது உடல் நலக்குறைவால் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலேயே படுத்த படுக்கையாக கிடக்கிறார்.
  • சட்ட விதிமுறைகளை பின்பற்றி ஓரிரு தினங்களில் கோவர்த்தன் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்துவோம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் இந்த பணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பா.ஜ.க. நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் நவீன் அவரது சகோதரர் சதீஷ், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

பணம் கை மாறிய இடங்களில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்த்தனின் ஓட்டலும் ஒன்று என கூறப்படுகிறது.

கோவர்த்தன் தற்போது உடல் நலக்குறைவால் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலேயே படுத்த படுக்கையாக கிடக்கிறார்.

விசாரணைக்கு அவரால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியுமா? என்பதை அறிவதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவரை சந்தித்தனர்.

சட்ட விதிமுறைகளை பின்பற்றி ஓரிரு தினங்களில் அவர் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்துவோம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News