மாணவி பிரியா மரண வழக்கு- முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் மனு
- முன்ஜாமின் கோரி மருத்தவர்கள் இரண்டு பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
- பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக 2 மருத்துவர்களும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்ட. சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி மருத்தவர்கள் இரண்டு பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மருத்துவர்களான பால்ராம் சங்கர், சோமசுந்தர் ஆகியோரின் மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரிக்கிறார்.
அந்த மனுவில், "பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக" 2 மருத்துவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.