தமிழ்நாடு

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக வாழ்ந்தவர் ஜெயலலிதா- அண்ணாமலைக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

Published On 2024-05-28 06:03 GMT   |   Update On 2024-05-28 06:03 GMT
  • ஜெயலலிதா இருந்து இருந்தால் முதல் ஆளாக ராமர் கோவிலுக்கு சென்று இருப்பார் என அண்ணாமலை கூறினார்.
  • சகோதரி ஜெயலலிதா ஒரு இந்துத்துவ வாதி என அழைப்பதை அவரே விரும்பமாட்டார்.

சென்னை:

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீவிரமான இந்துத்துவ வாதி என கூறினார்.

அண்ணாமலை கருத்துக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று பேட்டியில், மீண்டும் சொல்கிறேன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீவிரமான இந்துத்துவ வாதி. இந்துத்துவ என்பது ஒரு மதம் சார்ந்து கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வினருடன் விவாதிக்க தயார். இந்துத்துவா என்பது திரித்து சொல்லப்படுகிறது. இந்துத்துவா என்னவென்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா இருந்து இருந்தால் முதல் ஆளாக ராமர் கோவிலுக்கு சென்று இருப்பார் என கூறினார்.

ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கருத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் தளத்தில் அளித்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சகோதரி ஜெயலலிதா ஒரு இந்துத்துவ வாதி என அழைப்பதை அவரே விரும்பமாட்டார். சமுதாயத்தின் அனைத்து சாதி மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஒரு ஆன்மீக வாதியாக மத சார்பற்றவராகவே வாழ்ந்தவர்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News