தமிழ்நாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும்- அர்ஜூன் சம்பத் பேட்டி

Published On 2023-05-04 05:18 GMT   |   Update On 2023-05-04 05:18 GMT
  • தமிழக நிதி அமைச்சர் ஆடியோ விவகாரத்தை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
  • தேனி மாவட்டத்தில் சனாதன இந்து எழுச்சி மாநாடு, பேரணி, பொது கூட்டம் வரும் ஜூலை மாதம் நடைபெறகிறது.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் அன்னதானம், மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அன்னதானத்தை தொடங்கி வைத்த பின்னர் கட்சியின் தலைவர் அர்ஜூன்சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெரியகுளத்தில் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசார், போலீஸ் நிலையத்தை தாக்கினர்.

எனவே அந்த கட்சியை தடை செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். தமிழக நிதி அமைச்சர் ஆடியோ விவகாரத்தை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

தேனி மாவட்டத்தில் சனாதன இந்து எழுச்சி மாநாடு, பேரணி, பொது கூட்டம் வரும் ஜூலை மாதம் நடைபெறகிறது. இதில் அனைத்து இந்து அமைப்புகளும் பங்கேற்கின்றன. தமிழக-கேரள எல்லையில் கனிம வளங்கள் கடத்தல், வி.ஏ.ஓ. கொலை தொடர்பாக நடவடிக்கை கோரி சட்டப்பேரவை தொகுதி வாரியாக ஒலி எழுப்பும் போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்க நடைபெற உள்ளது. தமிழக இந்து அறநிலையத்துறையிடம் மங்கலதேவி கண்ணகி கோவிலை கேரள அரசு ஒப்படைக்க வேண்டும்.

அங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும். பா.ஜனதா பட்டியல் இன பொறுப்பாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News