தமிழ்நாடு

காவல் துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

Published On 2023-10-11 16:17 GMT   |   Update On 2023-10-11 16:19 GMT
  • தமிழகம் முழுக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
  • 16 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுக்க 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 16 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சிவில் சப்ளை டி.ஜி.பி. வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார்.

திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதே போன்று கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடியால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தீபா சத்யன், டி.ஜி.பி. அலுவலக எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.

Tags:    

Similar News