வணிகர் சங்க பேரமைப்புக்கு 5 மாடியில் சொந்த கட்டிடம்- லெஜண்ட் சரவணன் திறந்து வைத்தார்
- ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
- அண்ணாமலை, வணிகர் சங்கப் பேரமைப்பு புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்னை கே.கே.நகரில் 2 கிரவுண்ட் பரப்பளவில் ரூ.6 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
5 மாடிகள் கொண்டதாக அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் கடைகள் அமைந்துள்ளது. முதல் மாடியில் பேரமைப்பு தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. 2-வது மாடியில் கருத்த ரங்கம், கூட்டம் நடைபெறுவதற்காக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
3-வது மாடியில் 'சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்' அமைக்கப்பட்டுள்ளது. 4-வது மாடியில் ஆலோசனை அரங்கமும், 5-வது மாடியில் வெளியூர்களில் இருந்து வரும் வணிகர்கள் தங்குவதற்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 15 அறைகள் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பேரமைப்பு தலைமை அலுவலக திறப்பு விழா இன்று காலையில் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கோவிந்த ராஜூலு வரவேற்க பொருளாளர் ஹாஜி ஏ.எம். சதக்கத்துல்லா கொடி ஏற்றினார்.
பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் வளாக கட்டிடத்தை லெஜண்ட் குழும தலைவர் லெஜன்ட் சரவணன் திறந்து வைத்தார்.
யோக ரத்தினம் லெஜண்ட் சரவணன் அரங்கத்தை ஸ்ரீ கோகுலம் குழுமம் நிறுவனர் கோகுலம் கோபாலன் திறந்து வைத்தார்.
சிட்டி யூனியன் பெயரிலான அரங்கத்தை வங்கியின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் காமகோடி, பேரமைப்பு அலுவலகத்தை போத்தீஸ் ரமேஷ் திறந்து வைத்தனர். பேரமைப்பு அரங்கத்தை ஹட்சன் அக்ரோ நிர்வாக இயக்குனர் சந்திரமோகன் திறந்து வைத்தார்.
நலிந்த வணிகர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், கரு.நாகராஜன், தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோசம், ஜெயமுருகன், பத்மஸ்ரீ ஐசக், மெடிமிக்ஸ் அனுப், ஜமாலுதீன், கிருஷ்ண மூர்த்தி.
புதுச்சேரி சிவசங்கர் எம்.எல்.ஏ., பிரபாகரராஜா எம்.எல்.ஏ. மற்றும் சிவ அருள் துரை, அருள் முருகன், மண்டலத் தலைவர்கள் சண்முகம், சூலூர் சந்திர சேகரன், ஆம்பூர் கிருஷ்ணன், கிருபாகரன், ஜோதிலிங்கம், ஆற்காடு சவுகத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், பேரமைப்பு துணைத் தலைவர்கள் கொரட்டூர் த.ராமச்சந்திரன், ஆவடி அய்யார் பவன் அய்யாத் துரை, பேரமைப்பு மாநில துணைத் தலைவரும், செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நலச்சங்க தலைவருமான எஸ்.உத்திரகுமார், மாவட்ட தலைவர்கள் என்.டி.மோகன், அயனாவரம் எஸ்.சாமுவேல், கிழக்கு மாவட்ட தலைவர் திருவொற்றியூர் ஆதி குருசாமி,
ஆவடி மாநகராட்சி அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர்கள் ஆர்.கே.எம்.துரைராஜ், ஆர்.வேலுச்சாமி, கூட்டமைப்பு தலைவர் அய்யார்பவன் வி.அய்யாத் துரை, சட்ட ஆலோசகர் இரா. அந்திரிதாஜ், செயலாளர் சத்யா கோ.ரவி, பொருளாளர் கே.ஆனந்தன், துணைத் தலைவர் கே.தாமோதரன், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இப்ரா கிம்பாஷா, ராஜேந்திர பிரசாத், வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் என்.ஜெயபால், மாவட்ட செயலாளர் ஹாஜி கே.முகமது, பொருளாளர் சி.மகேஷ்,
முத்தமிழ்நகர் வியாபாரிகள் சங்க தலைவர் என்.ரவிச்சந்திரன், செயலாளர் ஜெ.சங்கர், பொருளாளர் ராஜா, வி.பி.வில்லியம்ஸ், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.தேசிகன், பொருளாளர் ஜெ. சின்னவன், திருவான்மியூர் செந்தில்குமார், கந்தன் சாவடி வில்சன், மாவட்ட துணைத் தலைவர் சி.எம்.சாமி, அடையாறு பாஸ்கர், அண்ணாநகர் ஆர்.பாலாஜி, வி.ராஜேந்திரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல், மாவட்ட செயலாளர் ஷேக் முகைதீன், பொருளாளர் சத்திய ரீகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, வணிகர் சங்கப் பேரமைப்பு புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்.