தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: 30,383 பேரின் லைசென்ஸ் நிறுத்திவைப்பு

Published On 2023-08-09 06:56 GMT   |   Update On 2023-08-09 06:56 GMT
  • மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.
  • சிக்னலை மதிக்காமல் சென்ற குற்றத்துக்காக 8 ஆயிரத்து 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. சீட்பெல்ட் அணியாதவர்கள், ஹெல்மெட் அணியாதவர்கள் என பல்வேறு விதி மீறல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று வாகன விதிமீறலில் ஈடுபடுபவர்கள் 3 முறை விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களது லைசென்ஸ் ரத்து செய்யவும் போலீசார் பரிந்துரை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு 6 மாதத்தில் ஜூன் மாதம் வரையில் விதி மீறல்களில் ஈடுபட்ட 30 ஆயிரத்து 383 பேரின் லைசென்சை போலீசார் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அதிவேகமாக சென்ற 7 ஆயிரத்து 57 பேர் சிக்கியுள்ளனர். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 6 ஆயிரத்து 748 வழக்குகளும், போடப்பட்டு உள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டிய 2 ஆயிரத்து 272 பேர் சிக்கியுள்ளனர்.

சிக்னலை மதிக்காமல் சென்ற குற்றத்துக்காக 8 ஆயிரத்து 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News