தமிழ்நாடு

மாமல்லபுரம் மீனவர்கள் வலைகளில் அதிகம் சிக்கும் 'பலாசி'- மீன் முள் விஷத்தன்மை கொண்டது

Published On 2023-07-04 06:44 GMT   |   Update On 2023-07-04 06:44 GMT
  • அதிகாலை மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் வலைகளிலும் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியது.
  • மீனவர்களின் வலையும் சேதம் அடைந்து வருகின்றது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் மீனவர்கள் வலைகளில் உணவிற்கு பயன்படுத்த முடியாத "பலாசி" என்ற பலூன் மீன்கள் தற்போது அதிகளவில் வலைகளில் சிக்கி வருகிறது.

இதனால் மீனவர்களின் வலையும் சேதம் அடைந்து வருகின்றது. இன்று அதிகாலை மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் வலைகளிலும் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியது. பலாசி மீன்கள் விலை போகாததால் அவைகளை கரையோரம் வீசி விடுவார்கள். இந்த மீனின் உடலில் இருக்கும் வெளி முள்ளானது விஷத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. கடற்கரையில் வீசப்படும் மீன்களை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிதித்து பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதை அவ்வப்போது மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News