திருப்பூர் பழக்கடைகள்-குடோன்களில் அதிரடி சோதனை- 3500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
- 2 மாம்பழ குடோன்களில் வேதிப்பொருட்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்ப ட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
- மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப்பிற்க்காக அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூரில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருட்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, பாலமுருகன், தங்கவேல், கேசவராஜ், கோடீஸ்வரன், சிரஞ்சீவி, ரகுநாதன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நான்கு குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே. எஸ் .சி. ஸ்கூல் ரோடு, தினசரி மார்க்கெட், அதியமான் வீதி, நொய்யல் வீதி மற்றும் வெள்ளியங்காடு ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் வாழைப்பழ குடோன்களில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது 2 மாம்பழ குடோன்களில் வேதிப்பொருட்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்ப ட்டிருப்பதை கண்டு பிடித்தனர். அங்கு இருந்து சுமார் 3.50 டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப்பிற்க்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2.50லட்சம் ஆகும். இது தொடர்பாக 5 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள் வைத்தி ருந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறிய தாவது:-
பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும் .எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படி யாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது. சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே பழங்களை பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு ,அசிட்டலின் போன்ற ரசா யனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது. இவ்வாறு செய ற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் போது உடல் உபாதைகள் ஏற்படும்.
குறிப்பாக செயற்கையான முறையில் பழுக்க வைக்க ப்பட்ட மாம்பழம் சாப்பி ட்டால் தோல் அலர்ஜி ,வயிற்று வலி ,வயிற்று ப்போக்கு, வாந்தி ஏற்படும். ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்ப ழங்களின் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் .உட்பகுதி காயாக இருக்கும் .பழச்சாறு அளவு குறைவாக இருக்கும். பழத்தின் இயற்கையான மனம் குறைவாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். மாம்பழ விற்பனை உரிமை யாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார்.