வேளாண் பட்ஜெட்: பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு
- இணைய வழி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகளை நடத்த 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:
* 100 விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* இணைய வழி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* வேளாண் வணிக மேம்பாட்டிற்காக 770 தீவிர விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.
* பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு
* பண்ணை வழி வர்த்தகத்தை ஊக்கப்படுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு.
* 100 சேமிப்பு கிடங்குகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
* புத்தாக்க நிறுவனங்களை ஊக்கப்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகளை நடத்த 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை இனி விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை என பெயர் மாற்றம்.
* கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு.
* பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு.
* ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.