தமிழ்நாடு
வள்ளலார் சர்வதேச மையம்- சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
- வழக்குகள் ஜூன் 24ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி.
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும் என நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு தெரிவித்துள்ளது.
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஜூன் 24ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
சத்தியஞான சபைக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கவும், அறங்காவலர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை உறுதி அளித்துள்ளது.