தமிழ்நாடு

வந்தே பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்- பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Published On 2023-09-25 05:28 GMT   |   Update On 2023-09-25 10:10 GMT
  • 9 வந்தே பாரத் ரெயில்களை திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

சென்னை:

பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கும் என 2 புதிய ரெயில்கள் உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில்களை காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் தற்போது 12 மணி நேரமாக இருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும் இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

எனவே வந்தே பாரத் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News