தமிழ்நாடு
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பும் வசதியாக இன்று முதல் 12,846 பேருந்துகள் இயக்கம்
- சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 5.76 லட்சம் பேர் பயணம்.
- அவர்கள் சென்னை திரும்பும் வசதியாக 12846 பேருந்துகள் 4-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் (அக்டோபர் 31-ந்தேதி) கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று ஒருநாள் அரசு விடுமுறை அளித்தது. இன்று மற்றும் நாளை சனி, ஞாயிறு என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை ஆகும்.
வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் திங்கட்கிழமையில் இருந்து சொந்த ஊர் செல்ல ஆரம்பித்தனர். இவர்களுக்கு வசதியாக கடந்த 28-ந்தேதியில் இருந்து 30-ம் தேதிவரை 10,784 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
இவர்கள் தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு இன்று முதல் ஞாயிறு வரை சென்னை திரும்புவார்கள். இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் 4-ந்தேதி வரை (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.