தமிழ்நாடு
திருத்தணி அருகே விபத்தில் 4 பேர் உயிரிழப்பு- லாரி ஓட்டுநர் கைது
- படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை பகுதியில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விபத்து நிகழ்ந்ததும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் விபத்தில் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநர் பாஸ்கரை திருத்தணி போலீசார் கைது செய்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.