தமிழ்நாடு

ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி நடிகை கஸ்தூரி மனுதாக்கல்

Published On 2024-11-28 07:09 GMT   |   Update On 2024-11-28 07:09 GMT
  • எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
  • அந்த ஜாமின் நிபந்தனைளை தளர்த்தக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி மனுதாக்கல் செய்துள்ளார்.

பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இதனால் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் தலைமறைவானார். ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த ஜாமின் நிபந்தனைளை தளர்த்தக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி மனுதாக்கல் செய்துள்ளார்.

Tags:    

Similar News