தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-10-30 09:46 GMT   |   Update On 2024-10-30 09:46 GMT
  • சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  • வெடிகுண்டு சோதனை நபுணர்கள் விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.

ஒரு நாளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன.

இவை அனைத்தும் புரளி என்பதால் விமான நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து, வெடிகுண்டு சோதனை நபுணர்கள் விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News