தமிழ்நாடு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

Published On 2024-12-01 01:52 GMT   |   Update On 2024-12-01 01:52 GMT
  • வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது.
  • சிலிண்டர் விலையில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் இருக்கும்.

சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் இந்திய பணத்தின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் கியாஸ் சிலிண்டர் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். சர்வதேச சந்தைக்கு ஏற்பட்ட தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகிறது. கியாஸ் சிலிண்டர்கள் விலை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் கடந்த பல மாதங்களாக மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது.

சிலிண்டர் விலையில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் இருக்கும்.

இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

கடந்த மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.61.50 விலை அதிகரித்து இருந்த நிலையில், இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News