தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ்- வங்கிக்கணக்கில் செலுத்திய அரசு

Published On 2024-10-29 08:36 GMT   |   Update On 2024-10-29 08:36 GMT
  • பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
  • போக்குவரத்து ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் வங்கிக்கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டது.

சென்னை:

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ந்தேதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் வங்கிக்கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டது.

நேற்றிரவு வங்கிகளுக்கு பட்டியல் அனுப்பப்பட்டு இன்று காலை முதல் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News