தமிழ்நாடு

ரேசன் கடைகளில் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை- அமைச்சர் பெரியகருப்பன்

Published On 2024-10-26 08:47 GMT   |   Update On 2024-10-26 08:48 GMT
  • தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்பட உள்ளது.
  • அதிரசம்- முறுக்கு காம்போ 190-க்கு விற்பனை செய்யப்படும்.

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வருகிற அக்டோபர் 31-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு பல்வேறு முன்னேற்பாடுகள் செய்து வருகிறது. அந்த வகையில், மக்கள் ரேஷனில் பொருட்களை பெறும் வகையில் அனைத்து முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகளும் 27-ந்தேதி முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

* தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்பட உள்ளது.

* பண்டக சாலை, 65 சுயசேவை பிரிவு மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் 28-ந்தேதி முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படும்.

* அரை கிலோ பச்சரிசி, பாகு வெல்லம், மைதா மாவு, எண்ணெய் உள்ளிட்ட அதிரசம்- முறுக்கு காம்போ 190-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News