தமிழ்நாடு
கரையை கடந்த ஃபெஞ்சல் - புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
- கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
- துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு இருந்தது.
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையே நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததை ஒட்டி ஒன்பது துறைமுகங்களில் ஏற்றபட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.