ஃபெஞ்சல் கரையை கடந்தும் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
- ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
- 22 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று (நவம்பர் 30) நள்ளிரவு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், புயல் கரையை கடந்த புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
சில இடங்களில் சூறைக் காற்றும் வீசுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புயல் கரையை கடந்த பிறகும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போதும் உள் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.