8 கி.மீ. வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்பு
- சென்னையில் இருந்து 720 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்கிறது. இது நாகையில் இருந்து 520 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 720 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இது வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், கனமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.