தமிழ்நாடு (Tamil Nadu)

டென்மார்க் டிஜிட்டல் செயல் திட்டம் 2024-ல் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்கும் அழகு பாண்டிய ராஜாவை பாராட்டிய மு.க.ஸ்டாலின்!

Published On 2024-10-24 08:28 GMT   |   Update On 2024-10-24 08:28 GMT
  • “அடுத்த தலைமுறை டிஜிட்டல் நடவடிக்கை” நிகழ்ச்சியில் எக்கோபுளோட்டர் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படும்.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெறும் "அடுத்த தலைமுறை டிஜிட்டல் செயல் திட்டம் 2024-ல் இந்தியாவின் பிரதிநிதியாகச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வளர்ந்து வரும் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனமான ஸ்கிராப்பிபை எக்கோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ம.பி. அழகு பாண்டிய ராஜாவை பாராட்டினார்.

தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தினால் ஆதரவளிக்கப்பட்டுவரும் இந்த புத்தொழில் நிறுவனம், 2,000 விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய 18 நிறுவனங்களில், இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 28 முதல் நவம்பர் 2, 2024 வரை டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெறும் டிஜிட்டல் தொழில்நுட்ப உச்சி மாநாடு 2024-ன் உலகளாவிய இளைஞர் முயற்சியின் ஒரு பகுதியான "அடுத்த தலைமுறை டிஜிட்டல் நடவடிக்கை" நிகழ்ச்சியில் எக்கோபுளோட்டர் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படும்.

Tags:    

Similar News