தமிழ்நாடு

கழிவுகளை கொட்டிய மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்... கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

Published On 2025-01-02 12:56 IST   |   Update On 2025-01-02 12:56:00 IST
  • 7 நாட்களான நிலையில் ஏன் இன்னும் முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
  • கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டியது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று இது தொடர்பாக விசாரணை நடத்தியது.

அப்போது 390 டன் மருத்துவ கழிவுகளை 30 டிரக்குகள் கொண்டு அகற்றியுள்ளதாக கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கேரள வழக்கறிஞரிடம் "7 நாட்களான நிலையில் ஏன் இன்னும் முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பினர்.

மேலும், "மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காவிடில் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். கழிவுகளை தமிழகத்தில் நிறுத்துவதை நிறுத்த வேண்டும்" கேரள அரசுக்கு எச்சரிக்கு விடுத்தனர்.

மருத்துவ கழிவு கொட்டியது தொடர்பாக எல்லை மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கை ஜனவரி 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

குப்பை அகற்றம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழக்கறிஞர் சாய் சத்யஜித் ஆஜரானார்.

Tags:    

Similar News