தமிழ்நாடு

மருத்துவ காலிப் பணியிடங்கள் தி.மு.க. அரசின் நிர்வாக திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2024-11-13 04:13 GMT   |   Update On 2024-11-13 04:13 GMT
  • சாக்குபோக்கு கூறும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது.
  • தி.மு.க. அரசின் இந்தச் செயல் அறநெறி மீறி மக்களை கொடுமைப்படுத்துவதற்குச் சமம்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை முன்கூட்டியே கணக்கிட்டு, பணியாளர்களை விரைந்து தேர்ந்தெடுக்கும் வகையில் மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியத்தை தனியாக அமைத்து பொதுமக்களின் உயிரைக் காத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். ஆனால், கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுவிடுமே என்பதற்காக, நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி, மருத்துவத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இயலவில்லை என்று சாக்குபோக்கு கூறும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது.

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. தி.மு.க. அரசின் இந்தச் செயல் அறநெறி மீறி மக்களை கொடுமைப்படுத்துவதற்குச் சமம். நிதியை காரணம் காட்டி, மக்களுக்கு நீதி வழங்க மறுக்கிறது என்பதே தி.மு.க. அரசின் மீது மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News