தமிழ்நாடு

தீபாவளி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்- அமைச்சர் தகவல்

Published On 2024-10-25 09:42 GMT   |   Update On 2024-10-25 09:42 GMT
  • தமிழ்நாடு முழுவதும் 24 ஆயிரத்து 610 முழு நேர ரேஷன் கடைகள், 10 ஆயிரத்து 164 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
  • பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை:

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 24 ஆயிரத்து 610 முழு நேர ரேஷன் கடைகள், 10 ஆயிரத்து 164 பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் ரேஷனில் பொருட்களை பெறும் வகையில் அனைத்து முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகளும் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News