முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு சுமை அதிகமாகும்.
- மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழிகளில் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றி வருவது ஏற்புடையதல்ல. ஏற்கனவே தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மாற்றியமைத்த நிலையில், தற்போது முத்திரைத்தாள் கட்டணத்தையும் பத்து மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு சுமை அதிகமாகும்.
தமிழக அரசு பதிவுத் துறையின் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியதால் தற்போதைய பொருளாதார சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்படும். முத்திரைத்தாள் கட்ட ணம் மூலமாக அரசாங்கம் வருவாயைப் பெருக்க நினைப்பதை விட மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.