தமிழ்நாடு

எலி மருந்து விவகாரம்: தடை செய்யப்பட்ட மருந்தாக இருந்தால் நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2024-11-16 08:23 GMT   |   Update On 2024-11-16 08:23 GMT
  • தற்கொலைகளை தடுப்பதற்காக ஏற்கனவே சில மருந்துகளை அரசு தடை செய்துள்ளது.
  • இந்த சம்பவத்திலும் குறிப்பிட்ட எலி மருந்து தடை செய்யப்பட்டதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை:

சென்னையை அடுத்த குன்றத்தூர் மணஞ்சேரி தேவேந்திரன் நகர் பகுதியில் எலி மருந்தில் இருந்து வெளியேறிய கடுமையான நெடி காரணமாக 2 குழந்தைகள் உயிரிழந்தன. இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தற்கொலைகளை தடுப்பதற்காக ஏற்கனவே சில மருந்துகளை அரசு தடை செய்துள்ளது. இந்த சம்பவத்திலும் குறிப்பிட்ட எலி மருந்து தடை செய்யப்பட்டதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News