தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு

Published On 2024-11-18 04:15 GMT   |   Update On 2024-11-18 06:46 GMT
  • சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரன் ரூ.55 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

சென்னை:

தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அந்த மாதம் 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் கடந்த அக்டோபர் மாதம் தங்கம் இருந்த நிலையில், கடந்த மாதம் 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தையும் தாண்டியது. அடுத்த 3 நாட்களில் ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற உச்சத்தையும் தொட்டது.

அதன் பிறகும் விலை குறைந்தபாடில்லை. மேலும் அதிகரித்தே காணப்பட்டு, கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டியது.

இப்படியே நீடித்தால் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தையும் கடந்துவிடும் என்றே சொல்லப்பட்டது. விலை உயர்வு பலருக்கும் அதிர்ச்சியையே கொடுத்தது. எப்போதுதான் விலை குறையும்? என்ற எதிர்பார்ப்பையும் கொடுத்தது.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2-ந்தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது. எந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததோ, அந்த அளவுக்கு குறைந்து வருகிறது.

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரன் ரூ.55 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,995-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

17-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

16-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

15-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,560

14-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

13-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,360

 கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

17-11-2024- ஒரு கிராம் ரூ. 99

16-11-2024- ஒரு கிராம் ரூ. 99

15-11-2024- ஒரு கிராம் ரூ. 99

14-11-2024- ஒரு கிராம் ரூ. 99

13-11-2024- ஒரு கிராம் ரூ. 101

Tags:    

Similar News