செய்திகள்

வாட்ஸ்அப் 'டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன்': செயல்படுத்துவது எப்படி?

Published On 2017-02-10 07:49 GMT   |   Update On 2017-02-10 07:49 GMT
வாட்ஸ்அப் செயலியில் சில காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் வசதி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்டு விட்டது. இதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.
புதுடெல்லி:

உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் பல மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் வசதி ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. புதிய டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் வசதியின் மூலம் மொபைல் போன் நம்பரை பதிவு செய்யும் போதோ அல்லது செயலியை மொபைல் நம்பர் மூலம் வெரிஃபை செய்யும்போதே வாடிக்கையாளர்கள் ஆறு-இலக்க கடவுச்சொல் ஒன்றை வழங்க வேண்டும். 

வாட்ஸ்அப்பில் வழங்கப்பட்டு வரும் புதிய டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் அம்சத்தினை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

முதலில் வாட்ஸ்அப் -- செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் -- எனேபிள் (WhatsApp > Settings > Account > Two-step verification > Enable) என்ற ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் வாட்ஸ்அப் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் அம்சம் செயல்படுத்தப்பட்டு விடும்.    



இந்த அம்சத்தினை செயல்படுத்தியதும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த கடவுச்சொல்லினை பதிவு செய்து, விரும்பினால் மின்னஞ்சல் முகவரியை வழங்கலாம். மின்னஞ்சல் முகவரியை வழங்குவதன் மூலம் கடவுச்சொல் மறந்து போகும் பட்சதத்தில் அக்கவுண்டினை மீட்க முடியும்.  

இந்த மின்னஞ்சல் முகவரி வாட்ஸ்அப்-ஐ டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் அம்சத்தை செயல் இழக்கச் செய்யும் லின்க்கினை அனுப்பும். இதனால் ஆறு இலக்க கடவுச்சொல் மறந்து போகும் போது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி அம்சத்தை செயலிழக்கச் செய்ய முடியும்.  

குறிப்பாக இந்த அம்சத்தினை செயல்படுத்த வாடிக்கையாளர்கள் வழங்கும் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்யாது என்பதால் வாடிக்கையாளர்கள் சரியான மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும் என வாட்ஸ்அப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் அம்சத்தினை செயல்படுத்தி இருந்தால், கடவுச் சொல் இன்றி இறுதியாக வாட்ஸ்அப் பயன்படுத்தியதில் இருந்து ஏழு நாட்களுக்கு உங்களது மொபைல் போன் நம்பர் கொண்டு வாட்ஸ்அப்-ஐ ரீவெரிஃபை செய்ய முடியாது. 

இதனால் உங்களது கடவுச் சொல்லை மறந்து போகும் பட்சத்தில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனின் போது மின்னஞ்சல் முகவரி வழங்கவில்லை எனில் இறுதியாக வாட்ஸ்அப் பயன்படுத்தியதில் இருந்து ஏழு நாட்களுக்கு வாட்ஸ்அப்-ஐ ரீவெரிஃபை செய்ய முடியாது.   

ஏழு நாட்கள் முடிந்த பின் கடவுச் சொல் இன்றி வாட்ஸ்அப்-ஐ ரீவெரிஃபை செய்ய முடியும். எனினும் ரீவெரிஃபை செய்யும் போது முந்தைய குறுந்தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடும். இதோடு கடவுச்சொல் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்திய 30 நாட்களுக்கு பின் மொபைல் நம்பரை ரீவெரிஃபை செய்யும் போது உங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட் முழுமையாக அழிக்கப்பட்டு புதிய அக்கவுண்ட் உருவாக்கப்படும்.

Similar News