செய்திகள்

பிரபல ஸ்மார்ட்போன் பிரான்டு பட்டியலில் இடம் பிடித்த சீன நிறுவனம்

Published On 2017-05-11 15:32 GMT   |   Update On 2017-05-11 15:32 GMT
உலகின் பிரபல ஸ்மார்ட்போன் மாடல்கள் சார்ந்த ஆய்வு அறிக்கையின்படி ஒப்போவின் R9S மாடல் உலகளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சீனா ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ கடந்த ஆண்டு வெளியிட்ட R9S மாடல் உலகின் பிரபல ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 2017-இன் முதல் காலாண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில் ஒப்போவின் R9S மாடல் உலகின் மூன்றாவது பிரபல மாடலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபரில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட R9S மாடல் இந்திய வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஆய்வு அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்களின் படி உலகின் பிரபல ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களை தொடர்ந்து ஒப்போ R9S மூன்றாவது இடத்தில் உள்ளது. 



ஒப்போ உலகம் முழுக்க 90 லட்சம் R9S போன்களை விற்பனை செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனத்திண் கேலக்ஸி J3 (2016) மற்றும் கேலக்ஸி J5 (2016) மாடல்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன.

2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை ஆப்பிள் நிறுவனம் 2.15 கோடி ஐபோன் 7, 1.74 கோடி ஐபோன் 7 பிளஸ் மாடல்களை விற்பனை செய்துள்ளது. இதே போன் ஒப்போ நிறுவனம் 90 லட்சம் R9S மாடல்களை விற்பனை செய்து மூன்றாவது இடம் பிடித்துள்ளது. 

சர்வதேச சந்தை நிலவரப்படி 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 35.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 4.3 சதவிகிதம் அதிகம் ஆகும். ஏற்கனவே வெளியான சந்தை வல்லுநர்களின் கணிப்பை விட இது சற்றே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News