செய்திகள்

ஆப்கான் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் சென்று சேர்ந்தார் ஜான் கெர்ரி

Published On 2016-04-10 10:18 GMT   |   Update On 2016-04-10 10:18 GMT
அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி ஆப்கானிஸ்தானில் இருந்து தனது பயணத்தை முடித்து கொண்டு ஜப்பான் சென்று சேர்ந்துள்ளார்.
பாக்தாத்:

ஈராக்கில்  ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, எந்த முன்னறிவிப்பும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமை திடீர் பயணமாக ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு சென்றார். தனது சுற்றுப்பயணத்தின் போது, ஈராக்  பிரதமர் ஹைதர் அல்- அப்தாதி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி இப்ராஹீம்- அல் - ஜப்பாரி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

பிறகு தனது ஆப்கான் பயணத்தை முடித்துக்கொண்டு ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இன்று காலை ஜப்பன் சென்று சேர்ந்தார். ஹிரோஷிமாவில் இரண்டு நாள் நடக்கும் ஜி-7 மாநாட்டில் தீவிரவாதம் உட்பட பல்வேறு பிரச்சணைகள் விவாதிக்கப்படவுள்ளன.

மேலும் ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளிள்,  இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஹிரோஷிமா நகரத்தின் அமைதி பூங்காவிற்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Similar News