செய்திகள்
கோப்பு படம்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்: ஆள்காட்டியதாக 40 பேர் தலையில் சுட்டு படுகொலை

Published On 2016-08-22 06:33 GMT   |   Update On 2016-08-22 06:33 GMT
ஈராக் நாட்டின் மோசூல் உள்ளிட்ட பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அரசின் உளவாளிகள் என்று சந்தேகித்து அப்பாவி பொதுமக்கள் 40 பேரை தலையில் சுட்டு படுகொலை செய்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்தாத்:

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் விமானப்படை தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கிடையே, இந்த தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பிணைக் கைதிகளின் தலைகளை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்தும், சுட்டுக்கொன்றும் வெறியாட்டம் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக்கில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மோசூல் நகரில் உள்ள மக்களை அங்கிருந்து தப்பிக்க உதவிய அரசின் உளவாளிகள் என்று சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவி பொதுமக்கள் 40 பேரை நேற்று தலையில் சுட்டுக் கொன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பெயர் பட்டியலுடன் மேற்கண்ட 40 பிரேதங்களும் மொசூல் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Similar News