செய்திகள்

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய இங்கிலாந்து தூதர் மனைவியுடன் ஹஜ் பயணம்

Published On 2016-09-17 06:28 GMT   |   Update On 2016-09-17 06:28 GMT
இஸ்லாமிய மதத்துக்கு மாறிய இங்கிலாந்து தூதர் சைமன் கோலிஸ் தனது மனைவியுடன் ‘ஹஜ்’ பயணம் மேற் கொண்டார்.
லண்டன்:

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய இங்கிலாந்து தூதர் ‘ஹஜ்’ பயணம் மேற் கொண்டார்.

சவுதி அரேபியாவுக்கான இங்கிலாந்து தூதராக சைமன் கோலிஸ் பதவி வகிக்கிறார். இவர் தனது மனைவி ஹுடா முஜார்கியுடன் அங்கு தங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது மனைவி ஹுடாவுடன் ‘ஹஜ்’ புனித யாத்திரை மேற் கொண்டார். அப்போது ஹஜ் யாத்திரை செல்பவர்கள் உடையை அவர்கள் அணிந்திருந்தனர்.

இவர்கள் ஹஜ் யாத்திரை சென்ற செய்தி போட்டோவுடன் டுவிட்டரில் வெளியிடப்பட்டது. அதை பவுசியா அல்பகர் என்ற சவுதி அரேபிய பெண் எழுத்தாளர் வெளியிட்டார்.

அதில் சவுதி அரேபியாவின் முதல் இங்கிலாந்து தூதர் இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது மனைவியுடன் மெக்காவுக்கு ‘ஹஜ்’ புனித பயணம் மேற் கொண்டுள்ளார். கடவுள் அருள் கிடைக்கட்டும் என வாழ்த்தி இருந்தார்.

அதை தூதர் கோலிஸ் ஏற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து டுவிட்டரில் அரேபிய மொழியில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் இஸ்லாம் மதத்துக்கு மாறி 30 ஆண்டுகளாக முஸ்லிம் கலாசாரத்துடன் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து அவருக்கும் அவரது மனைவிக்கும் டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்தன.

Similar News