செய்திகள்

தசைநோயினால் அவதிப்படும் மகன்களை கருணை கொலை செய்ய அனுமதி கேட்கும் தந்தை

Published On 2017-01-25 06:05 GMT   |   Update On 2017-01-25 06:05 GMT
வங்காள தேசத்தில் தசை நோயினால் அவதிப்படும் தனது மகன்களை கருணை கொலை செய்ய ஒரு தந்தை அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். இதனால் வங்காள தேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டாக்கா:

வங்காளதேசத்தில் கிராமபகுதியை சேர்ந்தவர் தொபாசல் உசேன். ஏழையான இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது 24 வயது மற்றும் 13 வயது மகன்கள் மற்றும் 8 வயது பேரன் ஆகியோர் ஆபுர்வமான தசை நோயினால் அவதிப்படுகின்றனர்.

அவர்களுக்கு வங்காள தேசம், மற்றும் இந்தியாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணத்தை செலவழித்து சிகிச்சை அளித்தார். பணம் இல்லாத நிலையில் தனது கடையை விற்று வைத்தியம் பார்த்தார்.

இருந்தும் நோய் குணமாக வில்லை. நோயினால் மகன்களும், பேரனும் அவதிப்படுவதைபார்த்து மன வருத்தத்தில் அவர் நொறுங்கி போனார். அதை தொடர்ந்து நோய் பாதித்துள்ள தனது 2 மகன்கள் மற்றும் பேரனை மருந்து மூலம் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் படி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தார்.

இதனால் வங்காள தேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசு அதிகாரிகள் உசேன் வீட்டுக்கு வந்து குடும்பத்தினரை பார்த்து சென்றனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் வங்காள தேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Similar News