செய்திகள்

துருக்கி மருத்துவமனையில் நோயாளிகளை பிணைக் கைதிகளாக பிடித்து தற்கொலைக்கு முயன்ற போலீஸ்

Published On 2017-02-01 14:21 GMT   |   Update On 2017-02-01 14:21 GMT
துருக்கி நாட்டில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை பிணயக் கைதிகளாக பிடித்து வைத்த போலீஸ் ஒருவர், தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இஸ்தான்புல்:

துருக்கி நாட்டில் இஸ்தான்புல் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் போலீஸ் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தனது அறையில் அவர் தனியாக இருக்கும் போது துப்பாக்கியை எடுத்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை மிரட்டியுள்ளார். 

மருத்துவமனையில் இருந்த அனைவரும் பயந்து ஒரு அறையில் பதுங்கியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மருத்துவமனையை சுற்றி வளைத்தனர். இதனால், பயந்து போன நோயாளி துப்பாக்கியை தனது தலையில் வைத்து சுட முயற்ச்சித்துள்ளார். ஆனால், அதற்குள்ளாக மற்ற போலீசார் தடுத்து விட்டனர்.

பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்களையும் போலீசார் விடுவித்தனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்றும், பயத்தின் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News