செய்திகள்

வீட்டுக்காவலுக்கு எதிர்ப்பு -ஹபீஸ் சயீத் ஆதரவாளர்கள் போராட்டம்

Published On 2017-02-01 16:17 GMT   |   Update On 2017-02-01 16:17 GMT
ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் அடைத்ததற்கு அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இஸ்லாமாபாத்:

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் உள்ளான். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்கள் நடவடிக்கை தொடங்கும் என பாகிஸ்தானுக்கு எச்சரித்ததாக கூறப்படுகிறது.  அமெரிக்காவின் வற்புறுத்துதலால் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் வீட்டுக்காவலில் வைத்து உள்ளது. 

இது ஹபீஸ் சயீதின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. லாகூர் உள்ளிட்ட நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போரட்டத்தின் போது டிரம்ப், மோடி ஆகியோரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஹபீஸ் சயீதை விடுவிக்காவிடில், ஜமாத்-உத்-தவா இயக்கம் மற்றும் பிற மதகட்சிகள் பாகிஸ்தான் முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என மிரட்டல் விடுத்து உள்ளன. 

நேற்று செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஹபீஸ் சயீத், “மோடியின் வலியுறுத்தல், டொனால்டு டிரம்பின் தூண்டுதலுக்கு பாகிஸ்தான் அரசு பணிந்துவிட்டது. எங்களை சிறையில் தள்ளுவதால் காஷ்மீர் விவகாரத்தில் இருந்து பின்வாங்கி விடுவோம் என்று அவர்கள் நினைக்கலாம், அது நடக்காது.” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News