செய்திகள்

20 மணிநேரம் இடைவிடாது வீடியோ கேம் விளையாடிய சீன இளைஞர் கோமா நிலையில் மீட்பு

Published On 2018-02-02 09:34 GMT   |   Update On 2018-02-02 09:34 GMT
சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள பிரவுசிங் சென்டரில் 20 மணிநேரம் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய இளைஞர் சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீஜிங்:

சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள பிரவுசிங் சென்டரில் கடந்த மாதம் 27-ம் தேதி மாலையில் நுழைந்த இளைஞர் ஒருவர் வீடியோ கேம் விளையாட தொடங்கினார். உணவு, நீர் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மறுநாள் மதியம் வரை அவர் கேம் விளையாடியுள்ளார்.

பின்னர், சுயநினைவு இழந்த நிலையில் உட்கார்ந்திருந்த நாற்காலியில் அப்படியே மயங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர், கை, கால்கள் அசையாமல் இருந்த அந்த இளைஞரை மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

வீடியோ கேம் விளையாடும் போது பாத்ரூம் மட்டுமே அவர் சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். அந்த இளைஞர் போதை பொருள் எதுவும் உட்கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News