செய்திகள்
கத்திக்குத்து தாக்குதல் நடந்த ரெயில்

டோக்கியோவில் மீண்டும் பயணிகள் ரெயிலில் கத்திக்குத்து தாக்குதல் - 17 பேர் படுகாயம்

Published On 2021-10-31 20:06 GMT   |   Update On 2021-10-31 20:07 GMT
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது, ஆகஸ்டு 6-ம் தேதி ஓடும் ரெயிலில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து நேற்று வழக்கம்போல் மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் கோகுரியோ ரெயில் நிலையத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அதிலிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சக பயணிகளை திடீரென கத்தியால் குத்தத் தொடங்கினார்.

இதனால் ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் அந்த வாலிபர் பயணிகளை தொடர்ந்து கத்தியால் குத்தினார். இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், அந்த வாலிபர் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். 

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News