உலகம்

அணை உடைந்து ஆயிரக்கணக்கானவர்கள் பலி- லிபியாவில் 8 அதிகாரிகள் கைது

Published On 2023-09-26 06:40 GMT   |   Update On 2023-09-26 06:40 GMT
  • வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகிவிட்டனர்.
  • அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார்.

டொர்னா:

லிபியா நாட்டில் சமீபத்தில் புயல் , மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டெர்னாவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த 2 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

இந்த நிலையில் இந்த 2 அணைகள் உடைந்தது தொடர்பாக நீர் வளத்துறையை சேர்ந்த 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 7 பேர் முன்னாள் அதிகாரிகள். ஒருவர் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News