உலகம்
null

லண்டனில் இந்திய மாணவர் மாயம்

Published On 2023-12-17 08:44 GMT   |   Update On 2023-12-17 08:45 GMT
  • பாட்டியாவின் கல்லூரி அடையாள அட்டை மற்றும் பிற சான்றுகளையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
  • உங்களுடைய உதவி முக்கியம் வாய்ந்தது என சிர்சா கேட்டுக் கொண்டார்.

லண்டன்:

இந்தியாவை சேர்ந்த மாணவர் ஜி.எஸ்.பாட்டியா என்பவர் லெவுப்ரோ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கிழக்கு லண்டனில் தங்கியிருந்த அவர் கடந்த 15-ந்தேதி முதல் மாயமானார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரான மன்ஜீந்தர் சிங் சிர்சா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். உங்களுடைய உதவி முக்கியம் வாய்ந்தது என சிர்சா கேட்டுக் கொண்டார்.

பாட்டியாவின் கல்லூரி அடையாள அட்டை மற்றும் பிற சான்றுகளையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த செய்தியை மக்கள் பகிர வேண்டும் என கேட்டு கொண்டதுடன், இந்திய மாணவரை பற்றி ஏதேனும் தகவல் இருக்குமென்றால் தொடர்பு கொள்ளும்படி 2 எண்களையும் பகிர்ந்து உள்ளார். கடைசியாக கடந்த 15-ந்தேதி கிழக்கு லண்டனின் கேனரி வார்ப் பகுதியில் அவர் தென்பட்டார். அதன்பின்னர் அவரை காணவில்லை. இதனால், அவரை கண்டறியும் முயற்சியில் இந்திய தூதரகம் மற்றும் பல்கலைக்கழகம் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News