உலகம்

காசாவில் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 28 பேர் பலி

Published On 2024-06-08 05:06 GMT   |   Update On 2024-06-08 05:06 GMT
  • ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசியது.
  • பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 9 மாதங்களாக நீடித்து வருகிறது.

இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் சுரங்கப்பாதையில் மறைந்திருந்த ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாகவும் , அப்பகுதியில் உள்ள உள்கட்டமைப்புகளை அழித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. அதேபோல் வடக்கு காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசியது. இதில் 3 பேர் பலியானார்கள்.

சமீபத்தில் மத்திய காசாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

Tags:    

Similar News