உலகம்

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம்: முதலிடத்தில் என்ன நகரம் தெரியுமா?

Published On 2024-10-29 13:14 GMT   |   Update On 2024-10-29 13:14 GMT
  • உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் லாகூர் முதலிடத்தில் உள்ளது.
  • அங்கு காற்றுத் தரக் குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி உள்ளது.

லாகூர்:

பாகிஸ்தானின் லாகூர் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லாகூரில் காற்றுத் தரக் குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி உள்ளது.

இதையடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோசமான காற்றின் தரம் காரணமாக இருமல், வைரஸ் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

மக்கள் முகமூடிகள் மற்றும் கண்ணாடிகளை அணிய சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.

லாகூர் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அழுக்கு, வெளிப்புற காற்றை தவிர்க்க ஜன்னல்களை மூட வேண்டும்.

வெளியே செல்லும்போது முகமூடி அணியவும், சுத்தமான காற்றிற்காக காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பயிர் எச்சங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிலக்கரி, குப்பை, எண்ணெய் அல்லது டயர்களை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை வளிமண்டலத்தில் நுழைகிறது. இதன் தாக்கம் குளிர்காலத்தின் தொடக்கத்தில் தோன்றும் மற்றும் பருவத்தின் இறுதி வரை இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News