உலகம்

தேர்தல் பிரசாரங்களை மறந்து நாட்டு நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: மங்கோலியா அதிபர்

Published On 2024-07-01 13:52 GMT   |   Update On 2024-07-01 13:52 GMT
  • மங்கோலியா பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
  • பிரசாரத்தில் பேசிய வெறுப்பு பேச்சுகளை மறந்து அரசியல் கட்சிகள் தேசிய நலனுக்கான ஒன்றிணைய வேண்டும்.

மங்கோலியா பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. முதல் கூட்டத் தொடர் நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது பிரசாரத்தில் பேசிய வெறுப்பு பேச்சுகளை மறந்து அரசியல் கட்சிகள் தேசிய நலனுக்கான ஒன்றிணைய வேண்டும் என அந்நாட்டு அதிபர் யுகா குரேல்சுக் வலியறுத்தியுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மங்கோலியா மக்கள் கட்சி, குடியரசு கட்சி, ஹன் கட்சி, சிவில் வில்-க்ரீன் கட்சி, மங்கோலியா தேசிய ஜனநாயக கட்சி, மங்கோலியா க்ரீன் கட்சி உள்ளிட்டக்கிய தேசிய கூட்டணி ஆகியவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன.

மங்கோலியாவின் சுதந்திரம், பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும். பரஸ்பர புரிதலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News