உலகம் (World)

ஹிஸ்புல்லாவின் பொருளாதாரம் மொத்தமாக சீர்குலையும் அபாயம்.. கிடுக்குப்பிடி போட்ட இஸ்ரேல்

Published On 2024-10-21 02:37 GMT   |   Update On 2024-10-21 02:37 GMT
  • இதன்மூலமே தங்களின் ஆயுத தேவைகளை ஹிஸ்புல்லா பூர்த்தி செய்கிறது.
  • அல் குவார்த் வழக்கும் பொருளாதார சேவைகளை பல லெபனானிய மக்களும் பயன்படுத்துகின்றனர்.

நேதன்யாகு வீடு  

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் தற்போது லெபனான் மீதும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதும் தாக்குதலை தொடர்கிறது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதன் எதிரொலியாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா பகுதியில் உள்ள பிரதமர் நேதன்யாகு வீட்டை குறிவைத்து ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல் நடத்தியது.

சூளுரை 

இதில் உயர் தப்பிய நேதன்யாகு ஹிஸ்புல்லாவை அழித்திழிக்க சூளுரை செய்துள்ளார். அதன்படி லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு பணபலம் கொடுக்கும் அல் குவார்த் அல் - ஹசன் என்ற பொருளாதார பிரிவு உள்ளிட்ட முக்கிய இலக்குகளை தாக்க உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எனவே அந்த இலக்குகளுக்கு அருகில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

அல் குவார்த் அல் - ஹசன்

அல் குவார்த் அல் - ஹசன் மூலமே ஹிஸ்புல்லாவுக்கு ஈரானிடம் இருந்தும், மக்கள் நன்கொடையாகவும் வரும் பணம் பரிவர்த்தனை செய்யபடுகிறது. இதன்மூலமே தங்களின் ஆயுத தேவைகளை ஹிஸ்புல்லா பூர்த்தி செய்கிறது. குறிப்பாக இந்த அல் குவார்த் வழக்கும் பொருளாதார சேவைகளை பல லெபனானிய மக்களும் பயன்படுத்தி வருவதால் இதன் மீதான தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

 

தலைமையகம் 

இதற்கிடையே லெபனானின் பெய்ரூட் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உளவுப்பிரிவு தலைமையகத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது நடத்திய தாக்குதலில், அதன் முக்கிய அதிகாரிகள் எல்ஹாக் அப்பாஸ் சலாமே, ராச்சா அப்பாஸ் இச்சா மற்றும் அகமது அலி ஹசின் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர்.

 

 100 ராக்கெட்

மேலும் நிலத்திற்கு அடியில் செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலை ஒன்றும் சேதமடைந்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு, பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு 100 ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் தாக்குதலால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News