உலகம்

புதுப்பிக்கப்பட்ட நாட்டர்டாம் தேவாலயம் திறப்பு: அதிபர் மேக்ரான், டிரம்ப், ஜெலன்ஸ்கி பங்கேற்பு

Published On 2024-12-07 20:57 GMT   |   Update On 2024-12-07 20:57 GMT
  • நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது.
  • இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.

பாரிஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.

இதையடுத்து, பிரான்ஸ் அதிபரான இம்மானுவல் மேக்ரோன் தேவாலயத்தை 5 ஆண்டுகளுக்குள் புனரமைப்பு செய்வதாக உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, சுமார் 750 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டு நாட்டர்டாம் தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரிசின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான நாட்டர்டாம் தேவாலயம் 5 ஆண்டுக்குப் பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த தேவாலய திறப்பு விழாவில் அதிபர் இம்மானுவல் மேக்ரான், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஒரு சாத்தியமற்ற மறுசீரமைப்பை பிரான்ஸ் சாத்தியப்படுத்தி உள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News