பிரான்சில் சாகச நிகழ்ச்சியின்போது விபத்துக்குள்ளான விமானம்- விமானி உயிரிழப்பு: வீடியோ
- 65 வயது மதிக்கத்தக்க விமானியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
- விமான விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்கிழக்கு பிரான்சின் கடற்கரையில் விமானக் காட்சியின் போது ஒரு சிறிய ஏரோபாட்டிக் விமானம் நேற்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
Fouga Magister விமானம் Lavandou விமான கண்காட்சியின் போது நேற்று மாலை 5 மணியளவில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில், விமானி உள்ளே சிக்கினார்.
மீட்பு நடவடிக்கையில் 65 வயது மதிக்கத்தக்க விமானியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. விண்டேஜ் விமானம் ஒரு வளைவில் இறங்கியபோது, கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் ப்ரோவென்ஸ் லேண்டிங்ஸின் 80வது ஆண்டு விழாவில் நிகழ்த்தப்பட இருந்த பிரெஞ்சு விமானப்படையின் துல்லியமான ஏரோபாட்டிக்ஸ் பிரிவான Patrouille de Franceக்கான வார்ம் அப் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த விமானம் கண்காட்சி நிகழ்த்திக் கொண்டிருந்தபோது விபத்து ஏறப்ட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வடிவமைக்கப்பட்ட, ஃபூகா மாஜிஸ்டர் பல ஆண்டுகளாக பிரெஞ்சு ராணுவத்தால் ஒரு பயிற்சி ஜெட் மற்றும் ஏரோபாட்டிக் விமானமாகப் பயன்படுத்தப்பட்டது.
இதனால், "துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள்" காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். விமான விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கடந்த புதன்கிழமை, கிழக்கு பிரான்சில் இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் நடுவானில் மோதியதில் இரண்டு பிரெஞ்சு விமானிகள் இறந்தனர் என்பது குறிப்பிடதக்கது.